.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு
Showing posts with label atomic power plant. Show all posts
Showing posts with label atomic power plant. Show all posts

Saturday, March 24, 2012

தமிழ் நாட்டுல விளக்கெரிய உதயகுமார் உதவலாம்.. பரிட்சை நேரமாய் இருக்கு...

udaya kumar can help in lighting the kuththu vilakku for tamilnadu as it is the time for examinations.


தமிழ் நாட்டுல விளக்கெரிய உதயகுமார் உதவலாம்..   பரிட்சை நேரமாய் இருக்கு...

 

 

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் : வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு


 




வள்ளியூர்: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக போராட்டக்குழுவினர் நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை சுமூகமாக முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடலோர கிராமங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான திட்டங்கள் மற்றும் 7 மாத காலத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் வாங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்க ஏடிஜிபி ஜார்ஜ் இன்று நெல்லை வந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அமைச்சரவை ஆதரவு அளித்ததையொட்டி அங்கு கடந்த 18ம் தேதி இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உட்பட 950 பேர் வேலைக்கு வந்தனர். அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 19ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 6வது நாளான இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட போராட்டக்குழுவினர் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசும் இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை கோர்ட் உத்தரவு பெற்று கைது செய்வது என்றும், அவர்கள் தவிர பொதுமக்கள் மீது 7 மாத  போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து ஆலோசிப்பது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது. இது தவிர  கூடங்குளத்தில் சிறப்பு வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்தபடி ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அணுமின்நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இன்று கூடங்குளத்திற்கு ஏடிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்தார். அங்கு அணுமின்நிலைய அதிகாரிகளுடனும், போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ரூ.500 கோடி திட்டங்கள் குறித்து அணுமின்நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.  கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் பணிகள் நடந்தன. வழக்கம் போல் அனைத்துப் பணியாளர்களும் வேலைக்கு வந்தனர். 7 மாதங்களாக முடங்கி கிடந்த பணிகளை விரைவில் முடிக்க 3 ஷிப்ட்களில் பொது விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர்.













Wednesday, February 29, 2012

முன்னெல்லாம் க்ளார்க்குகள் டீ குடிக்க போய்ருவாய்ங்க




முன்னரெல்லாம் கிளார்க்குகள் பத்து மணிக்கு உள்ளே வந்து மாங்க் மாங்குன்னு வேலை பார்த்து விட்டு பன்னெண்டு மணிக்கு ஒரு டீ யைக் குடித்து விட்டு (அதுக்குள்ளே டீ குடிக்கப் போய்ட்டாய்ங்களா என நாட்டு மக்கள் புலம்புவார்கள், அது வேறே விஷயம்) மறுபடியும் மாங்க் மாங்க்குன்னு வேலை பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு நாக்குத் தள்ளிப் போய் வீட்டுக்கு ஓடுவார்கள்.  ஒன்னு அம்பத்தைம்போதுக்கு  ஒருத்தன் உள்ளே வந்து கதவைச் சாத்துவதைப் பார்த்துவிட்டு ஒரு மொட்டையைத் தட்டிவிட்டு அதுக்கு ஒரு எங்கொயரியும் நடக்கும், யூனியனும் காப்பாத்தும்.   இதுதான் பேங்கு, போஸ்ட் ஆபீஸ், எல்.ஐ.சி, தாலுக்காபீஸ், கலெக்டரேட், ரயில்வே புக்கிங்க் என்று எல்லா இடத்திலும் நடந்தது.

இப்போ எல்லோர் முன்னாடியும் ஒரு கம்ப்யூட்டர் உட்கார்ந்திருக்கு.  அதுக்கு டீயை ஊற்றினால் பத்தாது.  புகைந்து விடும்.  கரண்ட் வேணும்.  ஒரு கம்யூட்டருக்கு 100 வாட்ஸ் என்றால் இப்போ ஒரு பத்து கோடி கம்ப்யூட்டர் என்றால் ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரம் இதுக்கு தேவை.

ஆக ஒரே ஒரு டீயில ஓடிக்கிட்டிருந்த நாடு இப்போ கண்டபடி வளர்ந்து முட்டிக்கிட்டு நிக்குது.  திரும்ப பளுப்புக் கலர் பேப்பர் பால் பாயிண்ட் பேனா என மாற்றிவிடலாம். அதுதான் நல்லது.

Thursday, February 16, 2012

சீக்கிரம் படிங்க.. அதுக்குள்ள கரண்ட் பிடுங்கிக்க போகுது

பேசாம அந்த அறுபது கிராமத்துக்கும் கரண்டை நிறுத்திர்லாம்.  தமிழ் நாடு பூரா நிறுத்தி எல்லோரையும் சிரமப் படுத்த வேண்டாம்.  என்ன நான் சொல்றது.



நாடே இருட்டுள கடக்கு..இங்கிட்டு இதுக உக்காந்து உண்ணாவிரதம் இருக்குக. என்னத்தை சொல்றது...


சென்னை, பிப்.9: கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைத் தொடர்ந்து 4 பேர் கொண்ட குழுவுக்கான பெயர்களை தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வியாழக்கிழமை வெளியிட்டார்.
அதன்படி நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அணுமின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் எஸ்.இனியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என்.விஜயராகவன் ஆகியோரைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வல்லுநர் குழுவின் அமைப்பாளராக எஸ். இனியன் செயல்படுவார்.
பணி என்ன? கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்புக் குறித்தும், அந்தப் பகுதி மக்களிடையே அது குறித்து இப்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்கள் பற்றியும், மாநில அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
முன்னதாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு நான்கு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி 77 பக்க அறிக்கையை அளித்துள்ளது. அத்துடன் தனது பணி முடிவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசினால் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, அப்பகுதி மக்களின் அச்சங்களை அறியும் வகையில், தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், சென்னை அண்ணா பல்கலை., எரிசக்தித்துறை பேராசிரியர் இனியன், அண்ணா பல்கலை., பேராசிரியர் அறிவொளி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எல். என். விஜயராகவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் அமைப்பாளராக பேராசிரியர் இனியன் இருப்பார் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தெரிவித்தார். மேல் நடவடிக்கைக்கு ஏதுவாக விரைவில் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறினார்.



current can go any time...better to have an oil 

lamp near by.
கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியை உடனடியாக
ஆரம்பிக்க வேண்டுமென ரஷ்யா கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

சென்னை வந்திருந்த இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்டின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் இவ்விவகாரம் குறித்து தெரிவித்த அவர்.

"கூடங்குளம் அணுமின் நிலையம்தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையமாகும். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணுமின் நிலையம் அமெரிக்காவின் பழைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளதால், பெரியளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து இருக்காது. கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அவர்களிடம் நேரிடையாக சென்று சமரசம் செய்ய மாட்டோம். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.
ரஷ்யா எப்போதும் இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயல்பட்டு வருகிறது. நட்புநாடுகள் என்று கூறிய சில நாடுகள் கூட இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது நிர்ப்பந்தம் செய்தது. அப்போதும் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது.

1988ம் ஆண்டு கார்ப்பசேவ் ரஷ்ய அதிபராக இருந்தபோது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு முதலாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடுவதற்கு என்ன காரணம் என்று ஆச்சரியமாக உள்ளது. போராட்டத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் பணிகள் எதுமின்றி எங்கள் நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. விஞ்ஞானிகளின் சேவை ரஷ்யா உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட உள்ள அணுமின் நிலையத்துக்கு தேவைப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகளை வாபஸ்பெற வேண்டிய நிலை ஏற்படும்.

கூடங்குளம் பிரச்னையை தீர்த்து அதை திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஞ்ஞானிகளை வாபஸ் பெறுவதைத் தவிர வழியில்லை. கூடங்குளத்தில் முதல் யூனிட் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மின்சார தேவையை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும். தமிழக முதல்வரும் பிரதமரிடம் மின்சாரம் கேட்டு வருகிறார். இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மட்டுமே தீர்வாகும்." என்று கூறியுள்ளார்.