.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு
Showing posts with label taxes for journey. Show all posts
Showing posts with label taxes for journey. Show all posts

Friday, February 17, 2012

ஏற்கனவே ரயில் பயணம் பாதுகாப்பா இல்லே. இப்ப வரியை வேறு விதிச்சீங்கன்னா மணிபர்சுக்கும் பாதுகாப்பு இல்லை.


ரயில் டிக்கெட் மீது பாதுகாப்பு வரி விதிப்பு?

கருத்துகள்

புதுடெல்லி, : ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என்று உயர்மட்டக் குழு கூறியுள்ளது. மேலும், இதற்காக ரயில் டிக்கெட் கட்டணத்தில் பாதுகாப்பு வரி விதிக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும், பாதுகாப்புக்கான புதிய திட்டங்களை வகுக்கவும் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் அனில் ககோத்கர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று இக்குழு கூறியுள்ளது. மொத்தம் 19 ஆயிரம் கி.மீ. ரயில் பாதைகளில் பாதுகாப்பு சிக்னல்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கோடி, எல்லா லெவல் கிராசிங்கிலும் பாலம் அமைக்க ரூ.50 ஆயிரம் கோடி, பாதுகாப்பான வகையில் ரயில் பெட்டிகளை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி மற்றும் ரயில் பாதுகாப்பு பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும் குழு கூறியுள்ளது.

மேலும், ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில், ரயில் டிக்கெட் கட்டணத்தில் புதிதாக பாதுகாப்பு வரி விதிக்கலாம் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி திரட்டலாம் என்றும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் கண்டிப்பாக உயரும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு வரி விதிக்கும் பரிந்துரையை ரயில்வே அமைச்சகம் ஏற்றால், ரயில் டிக்கெட் கட்டணம் நிச்சயமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.