.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Tuesday, April 10, 2012

ஏழையோ பணக்காரனோ தலைவலி ஒரே அளவுதான்.



ஒருவர் அரசு வேலையில் இருக்கிறார்.  நான்காம் நிலை ஊழியர். ஒரு லக்ஷம் ரூபாயில் ஒரு வீடுதான் சொத்து. இரண்டு பெண்கள்.  மூத்த பெண் காய்கறிக் கடை தினசரி மார்க்கெட்டில் வைத்து சுமாராய் வாழ்க்கை போகிறது.  சின்னப் பெண்ணுக்கு பொறாமை.  தானும் கடை வைக்கிறேன் என தக்காளிக் கடை வைத்து நஷ்ட்டமாய் போய் இப்போது அப்பாவுக்கு தலைவலி.
இன்னொருவர்  பெரிய பிசினஸ் மேன்.  ஒரு லக்ஷம் கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.  இவருக்கும் இரண்டு பெண்தான்.  மூத்த பெண் செய்கிற தொழில்கள் நன்றாக போவதால் வசதியாக வாழ்கிறாள்.  சின்னவளுக்கு பொறாமை.  தானும் பிசினஸ் பண்ணுகிறேன் என்று ஆரம்பித்து நஸ்ட்டமாய் போய் கோர்ட் வழக்கு என பிரச்சினகள் வேறு வந்துவிட்டது. இந்த அப்பாவுக்கும் தலைவலிதான்.
இதில் என்ன சமாச்சாரம் என்றால் இந்தத் தலைவலி கோடி மடங்கு ஆவதில்லை. அதுதான் கடவுளின் கருணை.  உடம்பு தாங்காது என்பது இறைவனுக்குத் தெரியுமே.