.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Sunday, April 14, 2013

அலகு குத்துதல்,piercing the cheek with a big rod,

ஒவ்வொரு வருடமும் சித்திரை ஒன்று அன்று பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அடப்பன்வயல் அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். சாந்தனாதர் சன்னதியிலிருந்து புறப்படுவார்கள். அலகு குத்துதல் என்பது இந்துக் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து (முக்கியமாக விநாயகருக்கு) தீபாரதனை காட்டிய பின் நடைபெறும்.பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை கன்னத்தில் குத்தி, மற்ற கன்னத்தில் எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி குத்துவதுமுண்டு. இன்றைய காலத்தில் மனிதர்கள் எதனை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. அதன்விளைவாக துன்பங்களை போக்கும் கடவுளுக்காக தன்னை துன்பப்படுத்திக் கொள்ளும் அதி தீவிர பக்தர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக அலகு குத்துவதைச் சொல்லலாம். ஒரு சிறு ஊசியோ அல்லது முல்லோ மனிதனின் காலில் குத்தினால் வலி உயிரை எடுத்துவிடும். ஆனால் ஒரு சிறிய மற்றும் பெரிய சூலாயுதத்தை நாக்கிலும், கன்னத்தின் ஒரு பகுதியில் குத்தி மறு பகுதியின் வழியே எடுத்து உலா வரும் இறைபக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பழக்கம் குறிப்பாக கிராம காவல் தெய்வங்களை வழிபடும் கிராம மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அலகு குத்துதல் என்பதற்கு பல வரலாறுகள் இருக்கிறது. வாழ்வியலில் சராசரி வாழ்க்கை நடத்தவே போராடும் மக்கள் தனது வேண்டுதலை தீவிரமாகவும், அதே சமயத்தில் கொடூரமாகவும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அலகு குத்துவதைச் சொல்லலாம். இந்த அலகு குத்தும் பழக்கம் அனைத்து கோவில்களிலும் கிடையாது. குறிப்பாக கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், எல்லையம்மன், திரொபதியம்மன், எக்களாதேவியம்மன், முனியாண்டி, கரடிப்பேச்சி மற்றும் முருகன் கோவில்களில் தான் அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் கிராம காவல் தெய்வங்களின் பொங்கல் மற்றும் கொடை விழாக்களின் போது தான் பக்தர்கள் இந்த அலகு குத்தும் பழக்கத்தை செய்து வருகின்றனர். அலகு குத்துவது அனைத்து பக்தர்களிடம் கிடையாது. 10,000 பேர் வழிபாடு நடத்துகின்ற ஒரு கோவில் திருவிழா என்றால் அதில் சிலர் மட்டுமே அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த அழகு குத்தும் விழா வெளியில் இருந்து பார்க்கும் நகர மக்களுக்கு வேண்டுமானால் கொடூரமாக தெரியலாம். ஆனால் கிராம மக்களுக்கு அது போன்ற விழாக்களும், வேண்டுதல்களும் வாழ்வியல் கலாச்சாரத்தோடு கலந்து விட்டது. அதனை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நகரில் இருப்பவர்களுக்கு மின்சார வசதியை எப்படி அத்தியாவசிய தேவையாக இருக்கிறதோ அதே போல் தான் அலகு குத்துதல், பூக்குளி இறங்குதல், புதைகுழியில் குழந்தைகளை புதைத்து எடுத்தல் நிகழ்ச்சிகளும் கிராம மக்களுக்கு இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் சமூக ஒற்றுமைக்கு நன்மை அளிக்கிறதோ இல்லையோ எந்தவித தீமைகளும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை. வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு தங்களின் அடுத்த வேலைகளினை பார்த்து சென்று விடுகின்றனர். இதனை நாம் போற்றி பாராட்ட விட்டாலும் குறை சொல்லுதல் கூடாது என்கிறார் வரலாற்று ஆசிரியரான லட்சுமிநாராயணண். அலகு குத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை என்று கூறும் அலகு குத்துவதில் அனுபவம் வாய்ந்த கிராம பூசாரியான காளியப்பன். இது ஒரு உன்னத வேண்டுதல் விழா என்கிறார். தீராத நோய், மனக்கவலைகள், குடும்ப க~;டங்கள், தங்களின் வாரிசுகளின் நலன்கள் போன்றவற்றை மனதில் கொண்டு வேண்டுதல் வேண்டிக் கொண்டு பின் கோவில் விழாக்களில் அதனை மக்கள் நிறைவேற்றுகின்றனர். இந்த அலகு குத்தும் விழா ஒரு நாளில் வேண்டிக் கொண்டு மறு நாளில் வேண்டுதலை நிறைவேற்றுகின்ற விழா இல்ல. திருவிழா ஆரம்பமானவுடன் அப்பொழுது ஆண்களும் பெண்களும் தங்களின் வேண்டுதலை மனதுக்குள் வேண்டி பின் மறு வருடம் கோவில் திருவிழா நடைபெறும் பொழுது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் வேண்டிக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு எந்த வித தீய மற்றம் வாழ்வியல் நடைமுறைக்கு குந்தகம் இல்லாமல் விரதம் இருந்து பின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மண்ணோடும் மக்களோடும் வாழ்க்கை நடத்தும் கிராம மக்கள் இறைவனிடம் தனது துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுதல் தான் சிறந்த வழி என்று நம்புகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு கோடி கோடியாக பணத்தை எடுத்துக் கொண்டு போய் பணத்தை குறி வைத்து நடத்தப்படும் கோவில்களுக்கு செல்ல வழியில்லை. கிராம காவல் தெய்வங்கள் தான் அவர்களுக்கு எல்லாமே. அவர்கள் வெயிளிலும் மழையிலும் நனையும் பொழுது கிராம காவல் தெய்வங்களும் வெயிளில் கருகுகிறது மழையில் நனைகிறது. அதனால் இது போன்ற வேண்டுதல்களை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்கிறார். அலகு குத்துவதால் வலி ஏற்பட வில்லையா என்று அலகு குத்தியிருக்கும் மாடசாமியிடம் கேட்ட பொழுது முதலில் அலகு குத்தும் பொழுது லேசாக வலி இருந்தது. ஆனால் அலகு குத்தியவுடன் இரத்தம் வராமல் தடுக்க அப்பகுதியில் விபூதியை 'மருலாடி' (அலகு குத்துபவரை மருலாடி என்று சொல்கின்றனர்) போட்டவுடன் வலியும் இல்லை ரத்தமும் வருவது இல்லை. இதற்கு காரணம் இறைவனின் அருள் தான் காரணம் என்கிறார். அதே போல் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் குத்திய அலகினை மருலாடி எடுத்த பொழுது ரத்தம் வராமல் தடுக்க தேங்காய் பருப்புகளை கடித்த தின்ற உடன் ரத்தம் வருவதில்லை என்கிறார். அலகு குத்தி வருவது தனக்கு 4வது முறை என்கிறார். அதனால் தனது வாழ்வில் ஒரு வித மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்கின்றார். இந்த அலகு குத்தும் பழக்கம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்கள் தான் கிராமப் பகுதிகளில் அதிகமாக செய்து வருகின்றனர் என்கிறார்.

திருவிளக்கு பூஜை,lamp festival,

சாந்தனாதர் சன்னதியில் சித்திரை ஒன்று அன்று திருவிளக்கு பூஜை நடந்தது.
சாந்தனாதர் சன்னதியில் சித்திரை ஒன்று அன்று திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளன. அவற்றை விவரமாக பார்ப்போம். 1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு 2. தேவையான பொருட்கள் 3. பூஜைக்குத் தயாராகுதல் 4. கணபதி வாழ்த்து 5. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் 6. தேவி வாழ்த்து 7. திருவிளக்கு அகவல் 8. திருவிளக்குப் பாடல் 9. கலசபூஜை 10. அர்ச்சனை செய்யும் முறை 11. அர்ச்சனை 108 12. போற்றுதல் முறை 13. போற்றுதல் 108 14. நிவேத்யம் 15. பாட்டு 16. தீபாராதனை 17. வலம்வருதல் 18. மங்களம் 19. பிராரத்தஆனை 1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது. ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர். 2. தேவையான பொருடகள் திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப்பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன. 3. பூஜைக்குத் தயாராகுதல் (i) திருவிளக்கை சுத்தம் செய்தல் திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும். (ii) பீடம் அமைத்தல் திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும். (iii) அலங்காரம் செய்தல் திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும். (iv) பூஜைக்கு அமருதல் திருவிளக்கில் எண்ணெய்விட்டு, குறைந்தபட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது. பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் சொல்லுக : ஓம். ஸர்வே பவந்து ¥கின : ஸர்வே ஸந்து நிராமயா : ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்கபாக் பவேத் 4. கணபதி வாழ்த்து (i) ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே. (ii) கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ¢தம் உமாஸ¤தம் சோக விநாச காரணம் நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம் ஓம் ¤முகாய நம: ஓம் கபிலாய நம: ஓம் லம்போதராய நம: ஓம் விக்ன ராஜாய நம: ஓம் தூம கேதவே நம: ஓம் பாலசந்த்ராய நம: ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் ஹேரம்பாய நம: ஓம் ஏகதந்தாய நம: ஓம் கஜகர்ணிகாய நம: ஓம் விகடாய நம: ஓம் கணாதிபாய நம: ஓம் கணாத்யஷாய நம: ஓம் கஜானனாய நம: ஓம் ¥ர்ப்பகர்ணாய நம: ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி 5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல் கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்போது ''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி'' என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும். ''ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''. 6. தேவி வாழ்த்து ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்திபூதே சனாதனி குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸ்துதே சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே 7. திருவிளக்கு அகவல் விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷ¢ தாயாரே பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன் மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன். 8. திருவிளக்குப் பாடல் (ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு) மங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்குதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே இருளை நீக்கும் விளக்கிதுவே இன்பம் ஊட்டும் விளக்கிதுவே அருளைப் பெருக்கும் விளக்கிதுவே அன்பை வளர்க்கும் விளக்கிதுவே இல்லம் தன்னில் விளக்கினையே என்றும் ஏற்றித் தொழுதிடவே பல்வித நன்மை பெற்றிடலாம் பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம் விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விளங்கும் ஜோதிதனை விமலை என்றே உணர்ந்திடுவோம். 9. கலச பூஜை கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும். ''கங்கே யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு'' பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும். பின் கீழ்வருமாறு சொல்லுக : ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை - அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை - புவியடங்கக் காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் - கரும்பு வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே 10. அர்ச்சனை செய்யும் முறை ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.