.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Saturday, March 24, 2012

அம்மா , பாவம் போய்ட்டுப் போறாங்க வேலையை திருப்பிக் கொடுங்க...குழந்தை குட்டியெல்லாம் கஸ்ட்டப் படுது.


ஐகோர்ட் உத்தரவுப்படி மீண்டும் பணி வழங்கக்கோரி

தமிழகம் முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

முன

தமிழ் நாட்டுல விளக்கெரிய உதயகுமார் உதவலாம்.. பரிட்சை நேரமாய் இருக்கு...

udaya kumar can help in lighting the kuththu vilakku for tamilnadu as it is the time for examinations.


தமிழ் நாட்டுல விளக்கெரிய உதயகுமார் உதவலாம்..   பரிட்சை நேரமாய் இருக்கு...

 

 

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் : வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு


 




வள்ளியூர்: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக போராட்டக்குழுவினர் நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை சுமூகமாக முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடலோர கிராமங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான திட்டங்கள் மற்றும் 7 மாத காலத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் வாங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்க ஏடிஜிபி ஜார்ஜ் இன்று நெல்லை வந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அமைச்சரவை ஆதரவு அளித்ததையொட்டி அங்கு கடந்த 18ம் தேதி இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உட்பட 950 பேர் வேலைக்கு வந்தனர். அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 19ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 6வது நாளான இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட போராட்டக்குழுவினர் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசும் இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை கோர்ட் உத்தரவு பெற்று கைது செய்வது என்றும், அவர்கள் தவிர பொதுமக்கள் மீது 7 மாத  போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து ஆலோசிப்பது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது. இது தவிர  கூடங்குளத்தில் சிறப்பு வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்தபடி ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அணுமின்நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இன்று கூடங்குளத்திற்கு ஏடிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்தார். அங்கு அணுமின்நிலைய அதிகாரிகளுடனும், போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ரூ.500 கோடி திட்டங்கள் குறித்து அணுமின்நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.  கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் பணிகள் நடந்தன. வழக்கம் போல் அனைத்துப் பணியாளர்களும் வேலைக்கு வந்தனர். 7 மாதங்களாக முடங்கி கிடந்த பணிகளை விரைவில் முடிக்க 3 ஷிப்ட்களில் பொது விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர்.













Friday, March 2, 2012

மொழி வாரி ராஜ்ஜியம் அமைச்சது தப்போன்னு இப்போ அரசாங்கம் கவலைப்படலாம்.


புதிய அணை கட்டுவதில் கேரளா உறுதி

1 கருத்துகள்

இடுக்கி: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளதாக கேரள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவியேற்றதில் இருந்து, முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சையை தீர்ப்பதே மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்துடன் நல்லுறவை பேணுவதே கேரளாவின் நோக்கம் என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் கேரளாவிற்கு பாதுகாப்பு என்ற வகையிலேயே இந்த பிரச்சனையை தீர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவது என்ற முடிவில் கேரளாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்த்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு திவலாயிருமோன்னு அரசாங்கம் கவலைப்படுது. கொஞ்சம் வருஸம் முன்னால கையெழுத்துப் போடாமல் சங்கங்கள் மறுத்திருக்கலாம்.


dinakaran 2.3.2012.

அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் எச்சரிக்கை

கருத்துகள்

புதுடெல்லி: மாநில அரசின் டி பிரிவு ஊழியர் சம்மேளனம் சார்பில் டெல்லியில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தேவிபிரசாத் சர்மா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: மத்திய அரசு வழங்கிய 6வது ஊதிய கமிஷனில் பரிந்துரை செய்த ஊதியத்தை மாநில அரசு நிராகரித்ததன் மூலம் 4ம் பிரிவு ஊழியர்கள் ரூ.1000 முதல் ரூ.3000 வரை சம்பளம் குறைவாக வாங்குகிறார்கள். அதை சரி செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி பிரிவு ஊழியர்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.டெல்லியில் நடைபெற்ற போராட்டம் குறித்து அகில இந்திய தலைவர் கே.கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 23 மாநிலத்தை சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எங்களது கோரிக்கைகளை மாநில அரசுகள் புறக்கணிக்கும்பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள டி பிரிவு ஊழியர்கள் ஏப்ரல் 9ம் தேதி அலுவலக பணிக்கு குந்தகம் இன்றி கறுப்பு கேட்ஜ் அணிந்து போராட்டம் செய்வோம்.

2வது கட்டமாக மே 7ம் தேதி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டமும், 3வது கட்டமாக ஜூன் 8ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம். அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்ட் 18ம் தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தவும், இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார். 

இன்னோரு தப்பும் சங்கங்கள் செய்தது.  100 கிலோமீட்டர் ட்ரான்ஸ்பருக்கு கையெழுத்து போட்டது.


அழிவு காலம் நெருங்கிவிட்டது



dinakaran 2.3.2012


நாடு முழுவதும் உள்ள

ஓரினச்சேர்க்கையாளர் எண்ணிக்கையை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கருத்துகள்


புதுடெல்லி : இந்தியாவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது'' என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் என பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், 'ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது. இது, இயற்கை கொள்கைக்கு எதிரானது’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சிங்வி, முகோத்பாத்யா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த 28ம் தேதி நடந்த விசாரணையில், ஒரினச்சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு இரு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததற்கு, ‘‘நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி நேரத்தை வீணாக்காதீர்கள்’’ என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில், ‘‘நாட்டில் தற்போது உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் முழு விவரம் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் கூறியதாவது:

‘‘டெல்லி உயர்நீதிமன்றத்தில்  கடந்த 2009ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களில் எட்டு சதவீதம் பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் கூட இங்கு தெரிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு வரும் முன் அரசு தரப்பு அதிகாரிகள் தங்களின் ‘ஹோம் ஓர்க்’,ஐ முடித்துக் கொண்டு வர வேண்டும்.

நாட்டில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினர், அரவாணிகள் எண்ணிக்கையையும், அவர்களில் எத்தனைபேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’இவ்வாறு நீதிபதிகள் கூறினர்

வேலியே பயிரை மேய்ஞ்ச்சுருச்சு

dinamalar  பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012,13:13 IST மாற்றம் செய்த நாள் : மார்ச் 02,2012,16:17 IST கருத்துகள் (3) கருத்தை பதிவு செய்ய
 பெங்களூரூ: கர்நாடக மாநில கோர்ட்டில் வக்கீல்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கனிம சுரங்க மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி ஆஜர்படுத்த வரும்போது , அங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்த வக்கீல்கள், பத்திரிகையாளர்களை தாக்கினர். இதில் பலர் காயமுற்றனர். சம்பவத்தை கண்டு தடுத்த போலீஸ்காரர்கள் மீதும் , தாக்குதல் நடத்திய சம்பவம் வக்கீல்கள் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் கோர்ட் வளாகத்தின் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அவர் கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்புக்குள்ளானார். இவரது வழக்கும் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. ஆந்திர, கர்நாடக எல்லை பகுதியில் சுரங்கம் தொழில் நடத்தி இங்குள்ள அரசிலையே கைக்குள் வைத்திருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இவர்கள் முறைகேடாக அரசு சுரங்கத்தை பெற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது வெளி உலகிற்கு தெரிய வந்ததும் சி.பி.ஐ.,வ ழக்கு பதிவு செய்து இவர்களை கைது செய்தது. இதில் சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் ஜனார்த்தன ரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். இந்நேரத்தில் அழைத்து வருவதை படம் எடுக்க, பத்திரிகை மற்றும் புகைப்படக்காரர்கள் கூட்டமாக காத்திருந்தனர். பலரும் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது , கோர்ட்டில் இருந்த வந்த வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். வக்கீல்களை குண்டாஸ் என்று எழுதும் நீங்கள் கோர்ட்டுக்குள் வரக்கூடாது என்றனர். தொடர்ந்து படம் எடுக்கவும் வக்கீல்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக திட்டினர். தொடர்ந்து சிலரை அடித்தனர். கற்களால் வீசி தாக்கினர். இதனையடுத்து அந்த பகுதி பெரும் களேபரமானது. பத்தரிகையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயினர். தொடர்ந்து பத்திரிகை வாகனங்கள் , டி,வி,. காமிராக்கள், சேட்லைட் கருவிகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடுத்த போது வக்கீல்கøள் போலீசையும் தாக்கினர் .நிலை‌மை கட்டு மீறி போகவே போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் பல பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. கோர்‌ட் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் மற்றும் பத்திரிகையாளர் வாகனங்களை வக்கீல்கள் தீ வைத்து கொளுத்தினர். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; கண்டனம் குவிகிறது: பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட வக்கீல்களின் தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் தலைமை நீதிபதி சைதானா , லோக்அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெக்டே உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், வக்கீல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.