.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Thursday, November 1, 2012

ridiculous parents

எங்க புதுக்கோட்டையிலே ஒரு வினோதமான பழக்கம். ஊரின் வடக்கு பகுதியிலே இருக்குற குழந்தைகளைக் கொண்டு போய் தெற்குப் பகுதியிலே இருக்குற பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டியது. தெற்குப் பகுதி பிள்ளைகளை வடக்குப் பகுதியில் சேர்க்க வேண்டியது. குழந்தைகள் பிஸி அவர்களில் சைக்கிள்களிலும் நடந்தும் பேரண்ட்ஸ்களின் டூ வீலர்களிலும் திருச்சி ரோடு N.H.49, தஞ்சை ரோடுN.H.36, ஈ.சி.ஆர் லிங்க் ரோடு S.H.71&26, 
மதுரை ரோடு N.H.49&36 ஆகியவைகளைக் கடந்து 
நாலைந்து கிலோமீட்டர் பயணம் பண்ணி பள்ளிக்கூடம் செல்கின்றன. மெட்ரிகுலேசன் மோகத்தில் இப்படி செய்தாலும் பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரும் இவ்வாறுதான் செய்கிறார்கள். அதே பகுதிப் பள்ளிகளில் சேர்த்தால் குழந்தைகள் நிம்மதியாய் பள்ளி சென்று வரும். ரோடைக் கடக்கும் போது அந்தக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பயம் மனதைக் குடைகிறது. உங்கள் ஊர்களிலும் இதே நிலைதானா? எழுதுங்களேன்!