.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, February 17, 2012

கிரிக்கட் மட்டையால யாரு மண்டையையாவது உடைச்சுட்டு இன்னோரு ஆயுள் தண்டனை வாங்காமல் இருந்தால் சரி.



கைதிகளுக்கான கிரிக்கெட் போட்டி


திகார் சிறையில் நடந்தது

கருத்துகள்


புதுடெல்லி : திகார் சிறையில் கைதிகளுக்கு இடையிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், கிரிக்கெட் வீரர்கள் ஆசிஷ் நெஹ்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பங்கேற்று கைதிகளை உற்சாகப்படுத்தினர். திகார் சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக, கைதிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திகார் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது மட்டும் பிரபலங்கள் அழைக்கப்படுவது வழக்கம்.

இந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆசிஷ் நெஹ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு கைதிகளை உற்சாகப்படுத்தினர். இறுதிப் போட்டியில், திகார் சிறை எண் 1 மற்றும் 2 கைதிகளின் அணிகள் மோதின. சிறை எண் 2 அணிக்கு, பிரியதர்ஷினி மஹ்டோ வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தோஷ் சிங் தலைவராக இருந்தார்.

முதலில் விளையாடிய இவரது அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 16.2லிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 170 ரன் எடுத்தது. சிறை எண் 1 அணி வீரர்கள் அடுத்ததாக களம் இறங்கி, 171 ரன் எடுத்து வெற்றி பெற்றது என்று சிறையின் செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா கூறினார். போட்டியை பார்வையிட வந்த நெஹ்ராவும், சர்மாவும் கூறுகையில், ‘’இது மிக வித்தியாசமான திட்டம். இதன்மூலம் கைதிகளின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களை நல்வழிப்படுத்த முடியும். சிறை வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பசுமையான மரங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளன’’ என்றார்.

No comments:

Post a Comment