.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, March 2, 2012

அரசு திவலாயிருமோன்னு அரசாங்கம் கவலைப்படுது. கொஞ்சம் வருஸம் முன்னால கையெழுத்துப் போடாமல் சங்கங்கள் மறுத்திருக்கலாம்.


dinakaran 2.3.2012.

அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் எச்சரிக்கை

கருத்துகள்

புதுடெல்லி: மாநில அரசின் டி பிரிவு ஊழியர் சம்மேளனம் சார்பில் டெல்லியில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தேவிபிரசாத் சர்மா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: மத்திய அரசு வழங்கிய 6வது ஊதிய கமிஷனில் பரிந்துரை செய்த ஊதியத்தை மாநில அரசு நிராகரித்ததன் மூலம் 4ம் பிரிவு ஊழியர்கள் ரூ.1000 முதல் ரூ.3000 வரை சம்பளம் குறைவாக வாங்குகிறார்கள். அதை சரி செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி பிரிவு ஊழியர்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.டெல்லியில் நடைபெற்ற போராட்டம் குறித்து அகில இந்திய தலைவர் கே.கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 23 மாநிலத்தை சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எங்களது கோரிக்கைகளை மாநில அரசுகள் புறக்கணிக்கும்பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள டி பிரிவு ஊழியர்கள் ஏப்ரல் 9ம் தேதி அலுவலக பணிக்கு குந்தகம் இன்றி கறுப்பு கேட்ஜ் அணிந்து போராட்டம் செய்வோம்.

2வது கட்டமாக மே 7ம் தேதி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டமும், 3வது கட்டமாக ஜூன் 8ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம். அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்ட் 18ம் தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தவும், இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார். 

இன்னோரு தப்பும் சங்கங்கள் செய்தது.  100 கிலோமீட்டர் ட்ரான்ஸ்பருக்கு கையெழுத்து போட்டது.


No comments:

Post a Comment