.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, March 2, 2012

வேலியே பயிரை மேய்ஞ்ச்சுருச்சு

dinamalar  பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012,13:13 IST மாற்றம் செய்த நாள் : மார்ச் 02,2012,16:17 IST கருத்துகள் (3) கருத்தை பதிவு செய்ய
 பெங்களூரூ: கர்நாடக மாநில கோர்ட்டில் வக்கீல்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கனிம சுரங்க மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி ஆஜர்படுத்த வரும்போது , அங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்த வக்கீல்கள், பத்திரிகையாளர்களை தாக்கினர். இதில் பலர் காயமுற்றனர். சம்பவத்தை கண்டு தடுத்த போலீஸ்காரர்கள் மீதும் , தாக்குதல் நடத்திய சம்பவம் வக்கீல்கள் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் கோர்ட் வளாகத்தின் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அவர் கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்புக்குள்ளானார். இவரது வழக்கும் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. ஆந்திர, கர்நாடக எல்லை பகுதியில் சுரங்கம் தொழில் நடத்தி இங்குள்ள அரசிலையே கைக்குள் வைத்திருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இவர்கள் முறைகேடாக அரசு சுரங்கத்தை பெற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது வெளி உலகிற்கு தெரிய வந்ததும் சி.பி.ஐ.,வ ழக்கு பதிவு செய்து இவர்களை கைது செய்தது. இதில் சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் ஜனார்த்தன ரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். இந்நேரத்தில் அழைத்து வருவதை படம் எடுக்க, பத்திரிகை மற்றும் புகைப்படக்காரர்கள் கூட்டமாக காத்திருந்தனர். பலரும் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது , கோர்ட்டில் இருந்த வந்த வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். வக்கீல்களை குண்டாஸ் என்று எழுதும் நீங்கள் கோர்ட்டுக்குள் வரக்கூடாது என்றனர். தொடர்ந்து படம் எடுக்கவும் வக்கீல்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக திட்டினர். தொடர்ந்து சிலரை அடித்தனர். கற்களால் வீசி தாக்கினர். இதனையடுத்து அந்த பகுதி பெரும் களேபரமானது. பத்தரிகையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயினர். தொடர்ந்து பத்திரிகை வாகனங்கள் , டி,வி,. காமிராக்கள், சேட்லைட் கருவிகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடுத்த போது வக்கீல்கøள் போலீசையும் தாக்கினர் .நிலை‌மை கட்டு மீறி போகவே போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் பல பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. கோர்‌ட் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் மற்றும் பத்திரிகையாளர் வாகனங்களை வக்கீல்கள் தீ வைத்து கொளுத்தினர். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; கண்டனம் குவிகிறது: பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட வக்கீல்களின் தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் தலைமை நீதிபதி சைதானா , லோக்அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெக்டே உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், வக்கீல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment