.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, March 2, 2012

அழிவு காலம் நெருங்கிவிட்டது



dinakaran 2.3.2012


நாடு முழுவதும் உள்ள

ஓரினச்சேர்க்கையாளர் எண்ணிக்கையை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கருத்துகள்


புதுடெல்லி : இந்தியாவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது'' என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் என பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், 'ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது. இது, இயற்கை கொள்கைக்கு எதிரானது’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சிங்வி, முகோத்பாத்யா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த 28ம் தேதி நடந்த விசாரணையில், ஒரினச்சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு இரு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததற்கு, ‘‘நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி நேரத்தை வீணாக்காதீர்கள்’’ என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில், ‘‘நாட்டில் தற்போது உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் முழு விவரம் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் கூறியதாவது:

‘‘டெல்லி உயர்நீதிமன்றத்தில்  கடந்த 2009ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களில் எட்டு சதவீதம் பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் கூட இங்கு தெரிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு வரும் முன் அரசு தரப்பு அதிகாரிகள் தங்களின் ‘ஹோம் ஓர்க்’,ஐ முடித்துக் கொண்டு வர வேண்டும்.

நாட்டில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினர், அரவாணிகள் எண்ணிக்கையையும், அவர்களில் எத்தனைபேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’இவ்வாறு நீதிபதிகள் கூறினர்

No comments:

Post a Comment